பாரதிய ஜனதா கட்சியினர் விஷத்தன்மை கொண்டவர்கள்: சோனியா

Written by vinni   // November 24, 2013   //

Sonia_Gandhi_1125682c5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஆளும் கட்சியான காங்கிரசும், எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தை கணைகளால் தாக்கி வருகின்றனர்.

ராஜஸ்தானில் வரும் டிசம்பர் முதலாம் திகதி சட்டசபைக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானின் கோட்டாவில் நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பாரதிய ஜனதா குறித்து கூறியதாவது:-

ராஜஸ்தானின் முதன்மை திட்டமான இலவச மருத்துவ திட்டத்தின் மருந்துகள் விஷமாக இருக்கிறது என்று பாரதிய ஜனதா கட்சியினர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். ஆனால், உண்மை என்னவெனில் விஷத்தன்மை கொண்டவர்களின் கட்சியான பாரதிய ஜனதா தான் இப்படிப்பட்ட வதந்திகளை பரப்பி வருகின்றது.

பாரதிய ஜனதா கட்சி, பொய்களை உண்மைகளாக மக்களிடையே பரப்பி வருகின்றது. அவர்கள் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை. அவர்கள் ஆட்சி மோகத்தில் உள்ளனர்.

அவர்கள் இருட்டை மட்டுமே பேசி வருகின்றனர். முன்னேற்றத்தை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. பல்வேறு முன்னணி நலத்திட்டங்களை செய்துள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா குறைகூறி வருகிறது என மேலும் அவர் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.