தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகள் குறித்து சங்கரி அதிருப்தி

Written by vinni   // November 24, 2013   //

anandasangariதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கும் தான் ஒத்துழைப்பு வழங்கவில்லை என தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வி. ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்ற பொதுநலவாய அரச தலைவர்களது மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாமை பெரும் பிழை என அவர் சுட்டிக் காட்டினார்.

கிளிநொச்சியில் நேற்று (23) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானங்கள் தனி ஒருவரினால் எடுக்கப்படுவதாக ஆனந்த சங்கரி குறிப்பிட்டார்.

நீதியின் படி நடக்க தவறின் பொது மக்களின் ஆதரவு கிடைக்காது எனவும் ஆனந்த சங்கரி மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.