வன்னியில் கட்டாய கருத்தடை!

Written by vinni   // November 24, 2013   //

Pregnant_womanஇலங்கை அரசால் தடைசெய்யப்பட்ட மருந்து வகையை கொண்டே முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் கருத்தடைகள் மேற்கொள்ளப்பட்டதாக சமாதான நல்லிணக்கத்திற்குமான பணியகத்தின் இயக்குனர் ஜெ.கமலானந்தன் தெரிவித்துள்ளார்

யாழில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சிவில் சமூகங்களுக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலிலையே அவர் இதனை தெரிவித்தார்

ஜெ.கமலானந்தன் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதி வாரத்தில் முல்லைத்தீவு மாவட்டம் வலைப்பாடு, வேராவில், கிராஞ்சி, ஆகிய கிராமங்களிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் மலையாள்புரம், உமையாள்புரம் ஆகிய கிராமங்களிலும் இலங்கையில் தடைசெய்யப்பட்ட மருந்து வகை மூலமே கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளன

மலைநாட்டில் குறித்த மருந்து வகை மூலம் கருத்தடை செய்து கொண்ட பெண் மரணமானதை அடுத்து அந்த சிகிச்சை முறை இலங்கை அரசால் தடை செய்யப்பட்டது.

ஜாடல் எனும் குறித்த மருந்து வகையை பாவிப்பதனால் அது பாரதூரமான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என்பதனாலையே அது தடை செய்யப்பட்டு இருந்தது.

தடை செய்யபட்ட இந்த முறையை கொண்டு எப்படி அவர்கள் சிகிச்சை அளித்தார்கள் என தெரியவில்லை. அதே சமயம் இந்த சிகிச்சை செய்யப்படும் போது வேராவில் வைத்தியசாலையில் மருத்துவர்கள் இல்லாமல் தாதியர்களே மேற்கொண்டு இருந்தனர்.

தற்போது அவற்றை பாவிக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதா? என்பது தொடர்பாக சில வைத்தியர்களிடம் நான் கேட்ட போது அது பற்றி சரியாக தெரியவில்லை என்றே தெரிவித்து இருந்தனர்.

போசாக்கு நிறை தொடர்பான கிளினிக்குக்கு வருமாறு அழைத்தே 50 பெண்களுக்கு இக் கருத்தடைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 25 பெண்களே தாம் விரும்பி செய்து கொண்டனர் என தெரிவித்து இருக்கின்றனர். மிகுதி 25 பெண்களுக்கு தெரியாமலே கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சிகிச்சை செய்து கொண்டால் 5 வருடங்களுக்கு கர்ப்பம் தரிக்காது. அதற்குள் கர்ப்பம் தரிக்க வேண்டுமாயின் இந்த சிகிச்சையை அகற்ற 60 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதனையும் நாமே செய்வோம் என இந்த சிகிச்சை செய்து கொண்ட பெண்களுக்கு அங்குள்ள தாதியர்கள் கூறி உள்ளார்கள்.

போஷாக்கு குறைப்பாட்டுக்கு கிளினிக் என கூறி அவர்கள் அனுமதியில்லாமல் கருத்தடையை செய்துவிட்டு, அதனை அகற்ற 60 ஆயிரம் ரூபாய் செலாவகும் என அவர்கள் சொன்னதன் மூலம் இது பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழி முறையோ எனவும் என்ன தோன்றுகின்றது என மேலும் தெரிவித்தார்.


Similar posts

Comments are closed.