பள்ளி வளாகத்தை ‘பாராக’ மாற்றிய அதிமுக

Written by vinni   // November 24, 2013   //

open_beer_001.w245வேளாண் துறை அமைச்சர் பிரசாரத்தின் போது அதிமுகவினர் காரிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி வளாகத்தில் அமர்ந்து, மது அருந்தி, ஆட்டம் போட்டது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏற்காடு இடைத்தேர்தல் பிரசாரம் அதிமுக, திமுக என இரு தரப்பிலும், தீவிரமாக நடந்து வருகிறது.

அதிமுக வேட்பாளர் சரோஜாவுக்கு ஆதரவாக தற்போதைய அமைச்சர்கள் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரிக்கின்றனர். திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்தது, முன்னாள் மத்திய, மாநில அமைச்சர்கள் ஓட்டு கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காரிப்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளர் சரோஜாவுடன், முன்னாள் அமைச்சர் வேலுமணி, வேளாண் அமைச்சர் தாமோதரன் மற்றும் கட்சியினர் ஊர்வலமாக சென்று ஓட்டு கேட்டனர்.

அப்போது அங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கோவை மாவட்டத்தில் இருந்து பிரசாரத்திற்கு வந்திருந்த அதிமுக தொண்டர்கள், முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படத்துடன் கூடிய பச்சை பனியன் அணிந்து, பள்ளி வளாகத்தில் அமர்ந்து, மதுபானம் அருந்தி, ஆட்டம் போட்டனர்.

பின்னர் காலி பாட்டில்களை பள்ளி வளாகத்திலேயே தூக்கி வீசி உடைத்தனர்.

இந்த சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Similar posts

Comments are closed.