சிறுவயதிலேயே அசத்தும் சுட்டிப் பையன்

Written by vinni   // November 23, 2013   //

baby_super_003இப்போதெல்லாம் சிறுவயதிலேயே இயல்பு தன்மையை மீறி செயல்பட்டு குழந்தைகள் வியக்க வைக்கின்றனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் பகுதியில் வசிப்பவர் ஹெல்தெர் தோர்பே(வயது 24).

இவருக்கு கடந்தாண்டு நவம்பர் மாதம் ஆண் குழந்தையொன்று பிறந்தது.

ஜோனாதன் என்ற பெயருடைய அந்த சிறுவன் பிறந்த போது 2½ எடை இருந்தான், பிறகு அவனுடைய அனைத்து வளர்ச்சியும் மிகவும் அபரிமிதமாக மாறியது.

அதாவது 7வது மாதத்திலேயே தானாக எழுந்து நடக்க ஆரம்பித்துவிட்டானாம்.

மழலை மொழியில் பேசுவதுடன், மடிக்கணனியை இயக்க தொடங்கியுள்ளான்.

ரிமோட் கண்ட்ரோல் சாதனம் மூலம் டி.வி சேனல்களை மாற்றி தனக்கு விருப்பமான நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கிறான்.

அத்துடன் விருப்பமான பாடல்களுக்கு ஏற்ப நடனமும் ஆடி அசத்துகிறான்.

மகனின் இந்த வளர்ச்சியை கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ள தாய், அவனுடைய விவேகம், வலிமை, அறிவுத்திறன் வியக்க வைக்கிறது. எதையும் விரைவாக கற்றுக்கொள்ள துடிக்கிறான். இது எங்களுக்கு மிகுந்த ஆச்சரியமாக இருக்கிறது என மகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.