கனடாவில் 100 செல்வந்தர்களின் பட்டியல் வெளியானது

Written by vinni   // November 23, 2013   //

canadaகனடாவின் வர்த்தக நாளிதழ், 100 செல்வந்தர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இவர்களின் சொத்து மதிப்பு மொத்தமாக 230 பில்லியன் டொலர்கள் எனவும், உயர்ந்த செல்வம் மிக்க வருடம் என்பதற்கு இது ஒரு சான்று என்றும் நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த மதிப்பீடு 2000ம் ஆண்டிலிருந்து 15 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சி அதிகரித்த போதிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் செல்வந்தர்களின் பெயர்கள் ஒரே மாதிரியாகவே தெரிகின்றன.

முதலிடம்: தொம்சன் குடும்பம்(Thomson Family)

தொம்சன் றொயிற்றேஸ் அன்ட் வூட்பிறிட்ஜ் கம்பனி லிமிடெட்(Thomson Reuters, Woodbridge Co. Ltd) சொந்தக்காரரான தொம்சன் குடும்பத்தினர் 26.1 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்புடன் மீண்டும் முன்னணியில் உள்ளனர்.

இரண்டாவது இடம்: கலென் வெஸ்ரன்(Galen Weston)

ஜோர்ஜ் வெஸ்ரன் லமிடெட், லோப்லோ கொஸ். Ltd மற்றும் ஹால்ட் றென்வுறு(George Weston Ltd., Loblaw Cos. Ltd., Holt Renfrew) ஆகியவற்றின் சொந்தக்காரரான இவர் 10.4 பில்லியன் நிகர மதிப்புடன் உள்ளார்.

இத்தொகை 2012 ஆம் ஆண்டை விட 24 சதவிகிதம் உயர்ந்துள்ளது. கடந்த வருடமும் இவர் இரண்டாம் இடத்திலேயே இருந்துள்ளார்.

மூன்றாவது இடம்: இர்விங் குடும்பம்(Irving Family)

இவர்கள் இர்விங் எண்ணை லிமிடெட் மற்றும் ஜே.டி.இர்விங் லிமிடெட் ஆகியனவற்றின் சொந்தக்காரர்கள்.

இவர்களது நிகர மதிப்பு கடந்த வருடத்தை விட 3 சதவிகிதம் குறைந்து 7.85 பில்லியன் டொலர்களாக உள்ளது.

நான்காவது இடம்: றொஜேர்ஸ் குடும்பம்(Rogers Family)

றொஜெஸ் தொடர்புகள் லிமிடெட்(Rogers Communications Inc)கடந்த ஆண்டை விட 18 சதவிகிதம் அதிகரித்து 7.6 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்பை கொண்டுள்ளது.

ஐந்தாவது இடம்: ஜேம்ஸ் பற்றிசன்(James Pattison)

ஜேம்ஸ் பற்றிசன் குரூப்பின் சொந்தக் காரரான இவர் கடந்த வருடத்தை விட 20 சதவிகிதம் அதிகரித்து 7.39 பில்லியன் டொலர்கள் நிகர மதிப்பை கொண்டுள்ளார். கடந்த வருடமும் 5ம் இடத்தில் இருந்துள்ளார்.


Similar posts

Comments are closed.