மிக வேகமாக சுருங்கி வரும் ஆர்ட்டிக் பனி பிரதேசம்

Written by vinni   // November 23, 2013   //

artic_ice_002ஆர்டிக் பிரதேசத்தின் பரப்பு குறைந்து வருவதாகவும், இதில் சர்வதேச சமுதாயம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு துறை செயலாளர் சக் ஹாகெல் தெரிவித்துள்ளார்.

கனடாவின் நோவா ஸ்கோடியா நகரில் ஹலிபாக்ஸ் சர்வதேச பாதுகாப்பு அமைப்பின் கூட்டம் நடந்தது.

இதில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க பாதுகாப்பு துறை செயலர் சக் ஹாகெல், ஆர்டிக் பகுதியில் ஏற்படும் சிறு மாற்றங்கள் கூட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.

எனவே ஆர்டிக் குறித்த விஷயத்தில் சர்வதேச சமுதாயம் கவனம் செலுத்த வேண்டும்.

வடதுருவமான ஆர்டிக் பிரதேசத்தில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் அதன் பரப்பு குறைந்து வருகிறது.

இது உலகின் மற்ற பகுதிகளை காட்டிலும் வேகமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.