ஆண்களுக்கு மூக்கு பெரிதாக இருப்பது ஏன் ?

Written by vinni   // November 23, 2013   //

boyபெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக இருப்பது ஏன் என்பதற்கு அமெரிக்க ஆய்வாளர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து மூன்று ஆண்டுகளாக ஆய்வு நடத்தி வந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் இதற்கான காரணம் விளக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளதாவது, பொதுவாக பெண்களை விட ஆண்களின் மூக்கு 10 சதவிகிதம் அளவில் பெரியது.

ஆண்களின் உடல் அமைப்பில் சதை அதிகம் உள்ளது. இதன் வளர்ச்சிப் பெருக்கத்திற்கு அதிக அளவு ஆக்சிஜன் தேவைப்படுகிறது.

பெண்களின் உடலில் சதையை விட கொழுப்பு அதிகம் உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கு சதை குறைவு என்பதால், அவர்களுக்கு ஆண்களை விட குறைந்த அளவிலான பிராண வாயு(ஆக்சிஜன்) போதுமானது.

அதிக அளவு ஆக்சிஜனை உள்ளிழுப்பதற்காகவே, ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்துள்ளது.

ஐரோப்பிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூக்கின் அளவுகளின் அடிப்படையின் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.