குழந்தைகளே பிரதமரிடம் கேள்வி எழுப்புங்கள்: ராகுல் காந்தி

Written by vinni   // November 23, 2013   //

rahul-gandhi-25409313தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குழந்தைகள்கூட பிரதமரிடம் கேள்வி எழுப்ப முடியும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம் பாலகாட் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், நாங்கள் இதுவரை அளித்த வாக்குதிகளை நிறைவேற்றியுள்ளோம்.

மக்களவைத் தேர்தலின்போது தகவல் அறியும் உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்தோம். அவற்றை இப்போது வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளோம்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சிறு குழந்தைகள்கூட பிரதமரிடம் கேள்வி எழுப்ப முடியும்.

2008ம் ஆண்டு நடைபெற்ற மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.50,000 வரை தள்ளுபடி செய்யப்படும் என்று பாஜக உறுதியளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த பின் அந்த அரசு தன் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். மேலும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மலைவாழ் மக்களின் குழந்தைகள் கல்வி கற்று முன்னேறினால்தான் நாடு வல்லரசாக மாற முடியும். அதனால் ஏழை ஏளிய மாணவர்களின் கல்விக்கு காங்கிரஸ் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.