நோ குட்மார்னிங்! ஜெய்ஹிந்த் சொல்லுங்க

Written by vinni   // November 23, 2013   //

indian armyவெள்ளைக்காரர்கள் சொல்லிக்கொடுத்த குட்மார்னிங் இனி சொல்ல வேண்டாம், இதற்கு பதிலாக அனைவரும் ஜெய்ஹிந்த் சொல்ல வேண்டும் என ராணுவத்திற்கு தளபதி பைக்ராம்சிங் கட்டாய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சுதந்திர போராட்டக்காலத்தின் போது முழங்கிய முழக்கம் இந்தியர்களை உணர்ச்சி பொங்க வைத்த வாசகம்தான் ஜெய் ஹிந்த். உள்ளத்தின் ஆழ்மனதில் இருந்து வெள்ளையர்கள் எதிர்ப்பு குரலாக இந்த கோஷம் எழுப்பியபோது அனைவருக்கும் ஒரு உற்றசாகமும், அதேநேரத்தில் ஆங்கிலேயரை கிலியடைய செய்யவும் ஜெய் ஹிந்த் ஒலித்தது.

இந்த வாசகம் மீண்டும் உயிர்பெறுகிறது ராணுவத்தின் மூலம், அதாவது ராணுவ தளபதி பைக்ராம்சிங் பிறப்பித்துள்ள உத்தரவில், ராணுவ ஊழியர்கள் அனைவரும் குட்மார்னிங், குட்ஆப்டர்னூன், போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். இதற்கு பதிலியாக ஜெய் ஹிந்த் என்றே மரியாதை செலுத்த வேண்டும்.

எந்த வொரு பணி துவங்கும் போதும் ஜெய் ஹிந்த் என்று சொல்லிக்கொள்ள வேண்டும் என்றும் இதே போல் எந்தவொரு பணி முடியும் போது பாரத் மாதாக்கி ஜெ என்று சொல்லிக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவு இன்று முதல் உடனடியாக நடைமுறைக்கு வந்தது. ராணுவத்தில் சிப்பாய் முதல் தளபதிகள் உள்பட அனைத்து ஊழியர்களும் குட்மார்னிங்குக்கு குட்பை சொல்லி, ஜெய்ஹிந்த் என ஒருவரை ஒருவர் மரியாதை செலுத்திக்கொண்டனர்.


Similar posts

Comments are closed.