பந்தா இல்லாத சச்சின்

Written by vinni   // November 23, 2013   //

sachin_tea_002சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற சச்சினுக்கு, இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மகத்தான சாதனைகள் புரிந்த சச்சின், ஓய்வு பெற்ற பின்னர் குடும்பத்துடன் ஜாலியாக ஊர்சுற்ற கிளம்பி விட்டார்.

இவருக்கு மிகவும் பிடித்த இடமான முசூரிக்கு சென்றுள்ளார்.

அங்கு லால்டிப்பா பகுதியில் உள்ள தனக்கு பிடித்தமான டீக்கடைக்கு சென்றார்.

சச்சின் முசூரிக்கு வரும் போதெல்லாம் தனது நண்பர் சஞ்சய் நரங் என்பவர் வீட்டில் தங்குவது வழக்கம்.

அப்போது நண்பருடன் இந்த டீக்கடைக்கு அடிக்கடி வந்த சச்சினுக்கு டீக்கடையின் உரிமையாளர் பிரத்யேகமாக தயாரித்து தரும் மசாலா டீ மிகவும் பிடித்தப் போனது.

இஞ்சி, தேன், எலுமிச்சைப் பழம் சேர்த்து கடையின் உரிமையாளர் விபின் பிரகாஷ் அளிக்கும் டீயை ருசிப்பதற்காக மனைவி அஞ்சலியுடன் சச்சின் இந்த கடைக்கு மீண்டும் விஜயம் செய்தார்.

பன் மற்றும் டீயை ருசித்த அவர் சுமார் 1/2 மணி நேரம் அங்கேயே இருந்து ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

சச்சினின் வருகையை பற்றி மகிழ்ச்சியுடன் கூறும் விபின் பிரகாஷ், அவருக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.

எவ்வளவு உயர்ந்த நிலைக்கு போனாலும் அவர் இப்போதும் சராசரி வாடிக்கையாளர் போல் தான் பழகுகிறார் என்று தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.