பெல்ஜியம் இளவரசி இன்று இந்தியா வருகை

Written by vinni   // November 23, 2013   //

Belgium-Flag-HD-Wallpaperஇந்தியா – பெல்ஜியம் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்தும் நோக்கில் பெல்ஜியம் இளவரசி அஸ்ட்ரிட் இன்று புதுடெல்லி வருகிறார். இளவரசியுடன் பெல்ஜியத்தில் உள்ள 10 பல்கலைக்கழக நிர்வாகிகள் மற்றும் சுமார் 300 தொழிலதிபர்கள் வருகின்றனர்.

பிரதமர் மன்மோகன் சிங், மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து பேசும் இளவரசி தலைமையிலான பெல்ஜியம் குழுவினர் மும்பை மற்றும் சென்னை நகரங்களுக்கும் சென்று பிரபல தொழிலதிபர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர்.

கடந்த (2012) நிதியாண்டியில் இந்தியா – பெல்ஜியம் நாடுகளுக்கிடையிலான வர்த்தக பரிமாற்றம் 12.15 பில்லியன் யூரோவை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.