அரசாங்கத்திற்கு எதிரானவர்களை மட்டுமே கமரூன் சந்தித்தார் – சந்திரசிறி

Written by vinni   // November 23, 2013   //

Chandrasri_CI-1அரசாங்கத்திற்கு எதிரான தரப்பினரை மட்டுமே பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் சந்தித்தார் என வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். குறிப்பாக யாழ்ப்hணத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது ஒரு அரசாங்க அதிகாரியையேனும் கமரூன் சந்திக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசியல் நோக்கங்களுக்காக அரசாங்கத்திற்கு எதிராக செயற்பட்ட தரப்பினரை மட்டுமே கமரூன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

வடக்கின் அபிவிருத்தி குறித்து அறிந்து கொள்ள கமரூன் மெய்யாகவே விரும்பியிருந்தால் குறைந்தபட்சம் ஒரு அரசாங்க அதிகரியையேனும் சந்தித்திருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். இரண்டு மாதங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்த வட மாகாண முதலமைச்சரை சந்தித்து பிரதேசத்தின் நிலைமைகளை அறிந்து கொள்வதில் பயனில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.