ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும்

Written by vinni   // November 23, 2013   //

13496003-grunge-flag-of-united-nations-image-is-overlaying-a-detailed-grungy-textureஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை கடும் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது, எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா மீளவும் உறுப்புரிமை பெற்றுக்கொண்டுள்ளதுடன், பிரித்தானியா இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்பில் செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என இலங்கைக்கு ஏற்கனவே பிரித்தானியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உறுப்பு நாடுகளில் இந்தியா அங்கம் வகித்து வருகின்றமையும் இலங்கைக்கு பாதக நிலைமையை ஏற்படுத்தும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் உள்நாட்டு அரசியல் அழுத்தங்கள் காரணமாக இந்தியா இலங்கைக்கு எதிராக செயற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகமாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகின்றது.எவ்வாறெனினும், ரஸ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட இலங்கையின் நட்பு நாடுகளும் இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் உறுப்பு நாடுகளின் வரிசையில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,


Similar posts

Comments are closed.