ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகின்றதா ?

Written by vinni   // November 23, 2013   //

mahinda-phoneஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் தொலைபேசி ஒட்டுக் கேட்கப்படுகின்றதா என்பது குறித்து இலங்கை பாதுகாப்பு தரப்பினர் கவனம் செலுத்தியுள்ளனர்.

அமெரிக்க பாதுகாப்பு முகவர் நிறுவனம், இலங்கை ஜனாதிபதியின் தொலைபேசியை ஒட்டுக் கேட்கின்றார்களா என்பது பற்றி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனாவுடன் நெருங்கிய உறவுகளைப் பேணி வரும் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

35 நாடுகளின் அரச தலைவர்களது தொலைபேசி உரையாடல் ஒட்டுக் கேட்கப்பட்டதாக தகவல்கள் வெளியான போதிலும், எந்த நாட்டுத் தலைவர்கள் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த பட்டியலில் இலங்கை ஜனாதிபதியின் பெயரும் உள்ளடக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.