துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் – ப. சிதம்பரம்

Written by vinni   // November 23, 2013   //

474102216secvpfஇலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது, மனித உரமை மீறல் நடந்தது குறித்து துரித விசாரணை நடத்தி குற்றவாளிகளை இலங்கை அரசு தண்டிக்க வேண்டும் என்று இந்திய மத்திய நிதியமைச்சர்  வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போதே ப. சிதம்பரம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல் என்பது எந்த நாட்டில் நடைபெற்றாலும் அதற்கு உலக மக்களுக்கு பதில் சொல்லியே தீர வேண்டும்.

இதற்கு எந்த எல்லைகளும் கிடையாது என இந்திய மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் மேலும் தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.