ஆவிகளுடன் வாழ்க்கை நடத்தும் அதிசய சமூகம்

Written by vinni   // November 22, 2013   //

live-with-ghost

இது ஒரு அரிய காட்சியாகவே உங்கள் கண்களுக்கு படும்: சுடுகாடு என்றாலே பீதியை கிளப்பும் எம்மவர்களுக்கு இது நிச்சயம் ஒரு அரிய காட்சி மட்டுமல்ல வினோதமான செய்தியும் கூட. பிலிப்பைன் நாட்டில் ஒரு பகுதியில் வீடற்ற வறிய குடும்பத்தை சேர்ந்த ஒரு சிறிய சமூகத்தினர் தங்களது நாளாந்த வாழ்வாதாரத்தை சுடுகாட்டிலும் அதனை அண்டியுமே கழித்துவருகிறார்கள்.

அவர்களது அடிப்படைத்தேவைகளான உணவு உடை உட்பட அனைத்துமே சுடுகாடுதான். சுடுகாட்டில்தான் சாப்பாடு சமையல் குளியல் விளையாட்டு என எல்லாமே… அதிகம் ஏன் ஒட்டுமொத்த குடும்பமும் கூடிக்குலாவி தங்களது சிறு தொழில்களை மேற்கொள்வதும் கூட சுடுகாட்டில்தான்.

இங்கு சில்லறை கடை வர்த்தகம் கொண்டு தங்களது சிறு சிறு  வியாபார நிலையங்களையும் சுடுகாட்டியே அமைத்து வர்த்தகம் செய்து வருகிறார்கள் இம்மக்கள். இவர்கள் இவ்வாறு சுடுகாட்டில் வீடமைத்து வாழ்வதற்கு 5 வருடங்களுக்கு 250 டாலர்கள் அறவிடப்படுகிறதாம்: மேலும் மேலதிகமாக இவர்களுடன் விருந்தினர்கள் மற்றும் உறவினர்கள் வந்து தங்கக்கூடாது எனவும் கட்டுப்பாடு உள்ளதாம். ஆஹா வாழ்க்கை முடிந்து போகும் இடத்திலும் ஒரு வாழ்க்கை நடக்குதப்பா… கொடுத்து வைத்த சமூகம்.


Comments are closed.