சடலத்துடன் ஓராண்டு வாழ்ந்த மனைவி

Written by vinni   // November 22, 2013   //

belgianபெல்ஜியத்தில் பெண்ணொருவர், தனது கணவரின் சடலத்துடன் ஓராண்டு வாழ்ந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. தலைநகர் புரூசெல்ஸ் புறநகர் பகுதியில் 73 வயதுடைய கணவரும் 69 வயது மனைவியும் வாழ்ந்து வந்தனர்.
கடந்த ஆண்டு நவம்பரில் கணவர் உடல்நலம் குன்றி இறந்து விட்டார். ஆனால் அவருடைய உடலை ஒரு பெட்டிக்குள் வைத்து மனைவி அதன் அருகிலேயே படுத்து தூங்கினார்.

வீட்டு உரிமையாளருக்கு வாடகைப்பணமும் கொடுக்கவில்லை. விசாரிக்கும் போது கணவர் மருத்துவ சிகிச்சை பெற வெளியே சென்றிருக்கிறார் என சாக்குப்போக்கு கூறி சமாளித்தார்.

சுமார் ஓராண்டாக வாடகை பணம் வராததால் வீட்டின் உரிமையாளர் காலி செய்ய முயன்ற போது தான் பெண்ணின் கணவர் ஒரு ஆண்டுக்கு முன்பே மரணம் அடைந்த விவரம் தெரியவந்தது. அவர் இயற்கை மரணம் எய்தியதால் போலீஸ் உதவியுடன் உடலை மீட்டு அடக்கம் செய்தனர்.


Similar posts

Comments are closed.