ரம்யாவை கடத்திச் சென்று படப்பிடிப்பு நடத்தலாம்! கன்னட ஹீரோ

Written by vinni   // November 22, 2013   //

10-ramya-14-600நடிகை ரம்யா கால்ஷீட் பிரச்னை செய்வதால் அவரை கடத்தி சென்று படப்பிடிப்பு நடத்தலாம் என்று கன்னட ஹீரோ சிவராஜ்குமார் கூறியுள்ளது கன்னட சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரம்யா நடிப்புக்கு முழுக்கு போடுவதாக அறிவித்தார். இதனால் இவர் ஒப்புக்கொண்டிருந்த நீர் டோஸ் உள்ளிட்ட சில கன்னட படங்களின் படப்பிடிப்புகள் தொடர முடியாத நிலை ஏற்பட்டது.

நீர் டோஸ் படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் ரம்யா நடிக்க இருந்தார். அது தனது இமேஜை பாதிக்கும் என்று கூறி நடிக்க மறுத்தார். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஜக்கேஷ் ரம்யா மீது பிலிம்சேம்பரில் புகார் அளித்தார். இருதரப்பினரிடமும் பிலிம்சேம்பர் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் இருவருக்கும் சமரசம் ஏற்பட்டது.

ஜனவரி மாதத்துக்குள் படத்தில் நடித்துக் கொடுப்பதாக ரம்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று கன்னட பட ஹீரோ சிவராஜ்குமார் நடிக்கும் ஆர்யன் படப்பிடிப்பில் ரம்யா பங்கேற்றார்.

இதில் சிவராஜ்குமார் பேசுகையில், ரம்யா கால்ஷீட் கிடைப்பதில் பிரச்னை இருப்பதால் அவரை தனி விமானத்தில் கடத்தி சென்று எங்கெல்லாம் படப்பிடிப்பு நடத்தவேண்டுமோ அங்கு நடத்திவிட்டு திரும்பவும் கொண்டு வந்துவிட்டுவிடலாம் என்று கூறியுள்ளார்.

இதை தமாஷா சிவராஜ்குமார் சொன்னதாக பட யூனிட்டார் கூறினாலும் இந்த பேச்சு ரம்யாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாம். நடிகையை கடத்தலாம் என்று ஹீரோ கூறியுள்ளது கன்னட சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Similar posts

Comments are closed.