இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு டிசம்பரில்

Written by vinni   // November 22, 2013   //

gk vasanஇலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் வாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று இந்திய மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இரு நாட்டு மீனவர்களும் சந்தித்து கலந்துரையாடுவதற்கான ஏற்பாடுகள் டிசெம்பர் மாதத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘இலங்கை கடற்படையால் புதுக்கோட்டை மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. உலக மீனவர் தினத்தன்று இச்சம்பவம் நடைபெற்றது வருத்தமளிக்கிறது.

இது தொடர்பாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தை தொடர்பு கொண்டு தெரிவித்தேன். டிசெம்பர் 3ஆவது வாரத்திற்குள் தமிழக – இலங்கை மீனவர்கள் ஒருசேர பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும்’ என்று அவர் உறுதியளித்தார்’ என ஜி.கே.வாசன் மேலும் கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.