பல்கலைக்கழக வளாகத்திற்குள் வீசப்பட்ட மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள்

Written by vinni   // November 22, 2013   //

jaffna_universityஇலக்கத்தகடு இல்லாத மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாதோர் இருவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் மாவீரர் தின துண்டுப் பிரசுரங்கள் சிலவற்றை இன்று (22) எறிந்துவிட்டுச் சென்றுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகம் மற்றும் கலைப்பீட வளாகங்களிலேயே இந்த துண்டுப் பிரசுரங்கள் எறியப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு கடந்த 11ஆம் திகதி முதல் டிசெம்பர் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதனால், பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் நடமாடுவதற்கும் விடுதியில் தங்குவதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.