பள்ளிகளில் இனிமேல் லட்டு கிடைக்கும்

Written by vinni   // November 22, 2013   //

Schoolgirlsஅரியலூர் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு தினை லட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு ரூ1.29 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதை தொடர்ந்து பள்ளிகளில் தினை லட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து அரியலூர் ஆட்சியர் சரவணவேல்ராஜ் கூறுகையில், தமிழக அரசின் முன்னோடித் திட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் தினை மாவில் செய்த லட்டு வழங்கும் திட்டம் நவம்பர் 8ம் திகதி முதல் செயல்படுத்தப்படுகிறது.

அரியலூர் மாவட்டத்திற்கு மட்டுமேயான இத்திட்டத்திற்காக அரசு சார்பில் ரூ1.29 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

40 ஆயிரத்து 680 மாணவர் களுக்கு பயனளிக்கும் வகையில் 5 மாதங்களுக்கு இத்திட்டம் நடப்பில் இருக்கும். தினமும் இருவேளை என வேளைக்கு 25 கிராம் எடையுள்ள தினைமாவு லட்டு வழங்கப்படுகிறது.

மேலும் வறுத்த கொண்டைக்கடலை, கேழ்வரகு, வரகு, கம்பு, சோளம், சாமை உள்ளிட்ட சிறுதானியங்களுடன் சுவைக்காக வெல்லம் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த லட்டு தயாரிப்பதற்காக சத்துணவு பணியாளர்களுக்கு தனிப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மாவட்டத்தில் பயன்பெறுவது போல, மற்ற மாவட்டங்களிலும் அடுத்தக்கட்டமாக தினை லட்டும் வழங்கும் திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Similar posts

Comments are closed.