பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிற்கும் இளவரசர் சார்ள்சிற்கும் பதிலடி கொடுத்த மஹிந்த

Written by vinni   // November 22, 2013   //

supreme_court_colomboபிரிதானிய பிரஜை கொலைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டிருந்த ஆளும் கட்சியின் தங்காலை பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐந்து சந்தேக நபர்களை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுதலை செய்துள்ளது.

2001ஆம் ஆண்டு நந்தார் பண்டிகையன்று குர்ஹாம் சாக்கியும், அவரது ரஷ்ய காதலியும் தங்காலை விடுதியொன்றில் வைத்து ஆளும் கட்சி அரசியல்வாதி உள்ளிட்ட குழுவினரால் கடுமையாக தாக்கப்பட்டனர். இதனால் குர்ஹாம் சாக்கி உயிரிழந்ததுடன், ரஷ்ய காதலி தாக்கப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மோசமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் ஆகியோரும் இலங்கை ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.

இந்த நிலையில், கொலை வழக்கில் குற்றஞ் சுமத்தப்பட்டிருந்த சந்தேக நபர்களை மேல் நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்துள்ளது.


Similar posts

Comments are closed.