இலங்கை ஜனாதிபதி ரஸ்ய ஜனாதிபதிக்கு இரங்கல் – ரஸ்ய ஜனாதிபதி இலங்கை ஜனாதிபதிக்கு வாழ்த்து

Written by vinni   // November 22, 2013   //

srilanka flgரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த, ரஸ்ய ஜனாதிபதிக்கு இரங்கல் வெளியிட்டுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமைப்பின் தலைமைப் பதவிக்கு தெரிவானமைக்காக ரஸ்ய ஜனாதிபதி புட்டின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டு;ள்ளார்.

எதிர்வரும் இரண்டாண்டுகளுக்கு ஜனாதிபதி மஹிந்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவராக கடமையாற்றுவார்.

இதேவேளை, ரஸ்யாவில் இடம்பெற்ற விமான விபத்திற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 50 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி இந்த விமான விபத்து இடம்பெற்றிருந்தது.

விமான விபத்தில் உயிர் நீத்த அனைவரினதும் குடும்பங்களுக்கும் தாமும் நாட்டு மக்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.