படகு மூலம் சென்ற 79 பேர் நாடு கடத்தல்

Written by vinni   // November 22, 2013   //

BOAT PEOPLE OVERBOARDபடகு மூலம் அவுஸ்திரேலியா சென்று புகலிடம் மறுக்கப்பட்ட 79 இலங்கை அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 10ம் திகதி படகு மூலம் அவுஸ்திரேலியா சென்றவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் வருவோர் திருப்பி அனுப்பப்படுவர் என அவுஸ்திரேலிய அரசாங்கம் எச்சரித்துள்ளது.

2012 ஒக்டோபர் தொடக்கம் இதுவரை 1100 சட்டவிரோத இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸன் தெரிவித்துள்ளார்


Similar posts

Comments are closed.