அரசின் வரவு – செலவுத் திட்டத்தால் எந்த நன்மையும் இல்லை: ஜே.வி.பி

Written by vinni   // November 22, 2013   //

jvp-sri-lanka2014ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஒரு வெறும் ஆவணமாகும். எந்தவொரு பிரயோசனத்துக்குமற்ற அறிவிப்பாகும். இந்த திட்டத்தால் பொதுமக்களுக்கு எந்தவொரு நன்மையும் இல்லை. இந்த அரசாங்கத்துக்கு குறுகிய காலம் அல்லது நீண்ட காலத்துக்கான பொருளாதார தீர்வு இல்லை’ என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த திஸாநாயக்க எம்.பி,

‘இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்காக அதிகரிக்கப்பட்டுள்ள படியானது ஒரு நாளைக்கு இரண்டு வெற்றிலைக்கூறுகளை வாங்குவதற்கே போதுமானதாக உள்ளது.

இதேவேளை, விவசாயிகளுக்கான ஓய்வூதியத்தைக் குறைத்து கெசினோவுக்கான வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. தொலைபேசிக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன’ என்று அவர் மேலும் கூறினார்.


Similar posts

Comments are closed.