ஐரோப்பிய யூனியனின் உயரிய விருதைப் பெற்றார் மலாலா (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 21, 2013   //

Malala Yousafzaiஐரோப்பிய யூனியனின் உயரிய விருதான சகோரோவ் மனித உரிமைப் பரிசு மலாலாவுக்கு வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் பெண்களின் கல்விக்காக போராடி வரும் சிறுமி மலாலா யூசுப்சாயை தலிபான்கள் சுட்டனர்.

மரணத்துடன் போராடி, தற்போது லண்டனில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

தொடர்ந்து மலாலாவின் உயிருக்கு தலிபன்கள் குறிபார்த்து வரும் நிலையில், அவர்களுக்கு அஞ்சாமல் தனது போராட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவரின் செயல்களை கௌரவிக்கும் வகையில் ஐரோப்பிய யூனியனின் உயரிய சகாரோவ் மனித உரிமை பரிசு வழங்க தீர்மானித்திருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று கிழக்கு பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போர்க் நகரில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவில் கலந்து கொண்ட ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்டின் ஸ்க்கல்ஸ், பரிசை வழங்கினார்.

50 ஆயிரம் யூரோக்கள் ரொக்கத்துடன் கூடிய இந்த பரிசை உலகெங்கும் உள்ள மனித உரிமை பிரசாரகர்களுக்கு அர்பணிப்பதாக மலாலா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.