இந்திய பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி

Written by vinni   // November 21, 2013   //

indian_money_001பொருளாதார சலுகைகளை அமெரிக்க நிதித்துறை திரும்பப் பெறுவதாக முடிவு செய்ததைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையில் தொடர்ந்து இரண்டாம் நாளாகக் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு அரசு முன்பு அறிவித்த சலுகைகளை நிறுத்திக் கொள்ள அந்நாட்டு நிதித்துறை திடீரென முடிவு செய்தது.

இதனைத் தொடர்ந்து ஆசிய பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டன. நேற்று இந்தியப் பங்குச் சந்தை சென்செக்ஸில் 255.69 புள்ளிகள் சரிவு ஏற்பட்டது.

இந்த சரிவு இன்றும் தொடர்ந்தது. எடுத்த எடுப்பிலேயே 150 புள்ளிகள் சென்செக்சிலும், 47 புள்ளிகள் நிப்டியிலும் சரிந்தது.

குறிப்பாக வங்கித் துறைப் பங்குகள் அதிக வீழ்ச்சி கண்டன.

ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டுத் துறை பங்குகளிலும் இந்த வீழ்ச்சி பரவியது. ஜப்பான், கொரியா உள்ளிட்ட ஆசிய பங்குச் சந்தைகள் இன்றும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன


Similar posts

Comments are closed.