மீனவர் ஊடுருவல் விவகாரத்தை இந்தியாவுடன் பேசித் தீர்க்க வேண்டும்

Written by vinni   // November 21, 2013   //

eu_CIஇலங்கைக் கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் மீன் பிடிப்பது தொடர்பான பிரச்சினைக்கு, இலங்கையும் இந்தியாவும் இருபக்கத்துக்கும் திருப்தியான முறையில் தீர்வுகாண்பதை தாம் ஊக்குவிப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் கூறியுள்ளது.தவறான மீன்பிடி முறைகள் பற்றி இலங்கையை எச்சரித்த ஐரோப்பிய ஒன்றியம் சட்டத்தை மீறி இந்தியா மீன்பிடித்தல் பற்றி மௌனம் காப்பது ஏன் என பிரதியமைச்சர் சரத் குமார குணரத்ன நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியிருந்தார்.இதுபற்றி ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்ஸ்தானிகர் டேவிட் டேலியிடம் கேட்டபோது இந்த பிரச்சினை இருதரப்பு பிரச்சினையாக இருப்பதால் அந்த மட்டத்திலேயே அது தீர்க்கப்பட வேண்டுமென கூறியுள்ளார்.


Similar posts

Comments are closed.