எல்லாத் தரப்பு நியாயங்களையும் இலங்கை செவிமடுக்க வேண்டும்! – அலிஸ்டயர் பர்ட்.

Written by vinni   // November 21, 2013   //

bird-211113-150ஏனைய தரப்புக்களின் கருத்துக்களுக்கும் இலங்கை அரசாங்கம் மதிப்பளிக்க வேண்டுமென பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் அலிஸ்டயர் பர்ட் தெரிவித்துள்ளார். எல்லா விடயங்களுக்கு நியாயம் கற்பிப்பதனை தவிர்த்து பல்வேறு தரப்பினரதும் கருத்துக்களையும் அரசாங்கம் செவிமடுக்க வேண்டும்.பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பிரித்தானிய பிரதமர் பங்கேற்றமை மிகவும் கடினமானது என்ற போதிலும் அது சரியான தீர்மானமே. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டியது அவசியமானது.

பல்வேறு தரப்பினரின் அறிவுறுத்தல்களையும் இலங்கை அரசாங்கம் கேட்டு நடக்க வேண்டும். வெறுமனே தமது பக்க நியாயங்களை மட்டும் வெளிப்படுத்துவதில் அர்த்தமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Similar posts

Comments are closed.