தமிழர்கள் தொடர்பில் கமரூனுக்கு “ஞானம்” பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது : – விக்கிரமபாகு

Written by vinni   // November 21, 2013   //

David-Cameron-007யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது அதனை தடுத்து நிறுத்தாது இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்க ஊக்குவித்த பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனுக்கு இன்று திடீரென தமிழர்கள் தொடர்பில் “ஞானம்” பிறந்துள்ளமை வரவேற்கத்தக்கது என நவசமசமாஜக்கட்சியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். மனித உரிமைகள் தொடர்பான கண்காட்சியை நாமே நடத்தினோம். எனவே இதற்காக ஐ.தே.கட்சியின் பிரமுகர்கள் சில பொதுபலசேனாவிடம் மன்னிப்பு கேட்டதென்பது அவர்களது சொந்த விருப்பமாகும். நாம் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டோமென்றும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தை பகிர்ந்து நாட்டை ஐக்கியப்படுத்துவோம் அமைப்பின் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது..

யுத்தத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். கமரூன் இதனை தடுத்தாரா இல்லாவிட்டால் இது தொடர்பில் ஐ.நாவில் முறைப்பாடு செய்தாரா எதனையும் செய்யவில்லை. இலங்கையில் யுத்தத்தை நடத்துவதற்கான உதவிகளை பிரிட்டிஷ் பிரதமர் கமரூன் வழங்கினார். ஆனால் இன்று திடீரென கமரூனுக்கு “ஞானம்” பிறந்துள்ளது. யுத்தக்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் தேவையென தெரிவித்துள்ளார். காலம் கடந்தாவது கமரூனுக்கு ஞானம் பிறந்துள்ளமையை வரவேற்கின்றோம் என்றார் அவர்.

 


Similar posts

Comments are closed.