புதிய வசதியுடன் Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம்

Written by vinni   // November 20, 2013   //

bigMeizu MX3 ஸ்மார்ட் கைப்பேசியானது 16GB, 32GB மற்றும் 64GB ஆகிய மூன்று வகையான சேமிப்பு கொள்ளளவு வசதியுடன் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாக கடந்த செப்டெம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது 128GB சேமிப்பு கொள்ளளவு வசதியுடன் கூடிய மற்றுமொரு Meizu MX3 ஸ்மார்ட் கைப்பேசி சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

660 டொலர்கள் பெறுமதியான இக்கைப்பேசியானது 5.1 அங்குல அளவு மற்றும் 1800 x 1080 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

மேலும் இவற்றில் 1.6GHZ வேகத்தில் செயற்படக்கூடிய Samsung Exynos 5, 8 Core Processor, 2GB சேமிப்பு நினைவகம் என்பனவும் காணப்படுகின்றது.

இவை தவிர 8 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா மற்றும் 2 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா போன்றனவும் தரப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.