‘கிரிக்கெட்டின் கடவுள்’ , தெண்டுல்கருக்கு கோவில்: பீகாரில் கட்டப்படுகிறது

Written by vinni   // November 20, 2013   //

sachin-tendulkarகிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியோடு கண்ணீருடன் விடைபெற்றார்.

கிரிக்கெட்டின் கடவுள் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் தெண்டுல்கருக்கு பீகார் மாநிலத்தில் கோவில் கட்டப்படுகிறது. மொனகனா மாவட்டம் அதார்வலியா என்ற கிராமத்தில் 6 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கோவில் கட்டப்படுகிறது. இதற்காக அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

போஜ்பூரி பாடகரான மனோஜ்திவாரி இந்த கோவிலை கட்டுகிறார். 5 அடி 5 அங்குலம் உயரம், 850 கிலோ எடையில் சச்சின் சிலை உருவாக்கப்படுகிறது.


Similar posts

Comments are closed.