செவ்வாய் கிரகத்தில் கிரானைட் மலைகள் : ஆதாரத்தை ‘நாசா’ மையம் வெளியிட்டுள்ளது

Written by vinni   // November 20, 2013   //

Granite-Hills-mosaic-Sillinசெவ்வாய் கிரகத்தில் கிரானைட் மலைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக ‘நாசா’ மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்கிரகத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்காக அமெரிக்காவின் நாசா மையம் விண்கலன்களை அங்கு அனுப்பியுள்ளது. இந்தியாவும் ‘மங்கல்யான்’ என்ற விண்கலத்தை செலுத்தியுள்ளது.

பொதுவாக செவ்வாய் கிரகத்தில் பெரும்பாலான பகுதிகள் மலைகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர் இருப்பதற்கான சூழ்நிலை இல்லை.

இந்த நிலையில் பூமியில் இருப்பது போன்று அங்கு கிரானைட் பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரத்தை ‘நாசா’ மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

எரிமலையின் கடும் வெப்பத்தினால் உண்டாகும் பாறைகள் ‘கிரானைட்’ ஆக மாறுகிறது. அதுபோன்ற பாறைகள் செவ்வாய் கிரகத்தில் பெருமளவில் உள்ளன. எனவே அவை கிரானைட் மலைகள் மற்றும் பாறைகளாக இருக்கலாம்.

இ,ந்த தகவலை ‘நாசா’வை சேர்ந்த பூமி மற்றும் விண்வெளி அறிவியல் தொழில்நுட்ப விஞ்ஞானி ஜேம்ஸ் விரே தெரிவித்துள்ளார்.


Similar posts

Comments are closed.