இத்தாலி அரசின் அழைப்பின்றிய கோத்தபாவின் இரகசிய இத்தாலி பயணம்

Written by vinni   // November 20, 2013   //

kottapayaஇத்தாலிய நேரத்தின்படி நேற்றிரவு 8 மணியளவில் ரோம் விமான நிலையத்தை சென்றடைந்தார்.

கோத்தபாவின் இந்த பயணம் இரகசியமான பயணம் என தெரிவிக்கப்படுவதுடன் இத்தாலி அரசின் அழைப்பின்றியே அவர் அங்கு சென்றுள்ளார்.

அத்துடன் அங்குள்ள இலங்கை பிரஜைகளும் எவரும் வைபவங்கள் எதற்கும் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கவில்லை.

இந்தநிலையில் இத்தாலியின் ரோம் நகரில் இருந்து 400 கிலோ மீற்றர் தூரத்தில் இருக்கும்.சென்ட் மெரினோ என்ற நாட்டுக்கு செல்லவே கோத்தபாய ரோம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலிக்கு நடுவில் அமைந்துள்ள இந்த நாடு 61 சதுர கிலோ மீற்றர் பரப்பளவை கொண்ட குட்டி நாடு. அந்த நாட்டின் மொத்த சனத் தொகை 31 ஆயிரமாகும். தனிநபர் வருமானம் 55.500 அமெரிக்க டொலர்கள்.

இத்தாலி நாட்டின் சட்டங்கள் சென்ட் மரினோ நாட்டுக்கு பொருந்தாது. இந்த நாட்டுடன் மேற்கொள்ளப்படும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான இரகசியங்கள்முழுமையாக பேணப்படும் என்பதே இந்த நாட்டின் சிறப்பம்சமாகும்.

அந்த நாட்டில் பணத்தை வைப்பிலிட வேண்டுமாயின் அந்த பணம் எப்படி கிடைத்தது என்பதை குறிப்பிட வேண்டிய தேவையில்லை. அந்நாட்டில் உள்ள வங்கிகளில் பணத்தை வைத்துள்ளவர்களின் விபரங்களை எந்த நாடுகளும் அறிந்து கொள்ள முடியாது.

அத்துடன் அந்த கருப்பு பணத்திற்கு எதிராக அந்த நாட்டில் வழக்குகளையும் தாக்கல் செய்ய முடியாது. இதனால் இந்த நாட்டை பிஸ்காலோ பரடைஸ் என்றும் அழைப்பார்கள்.

சுவிஸர்லாந்திலும் கடந்த காலங்களில் இப்படியான வங்கிகள் இருந்தன. எனினும் காலப் போகில் அங்கு புதிய சட்டங்கள் அமுலுக்கு கொண்டு வரப்பட்டன.

இதனால் ஆயுத விற்பனை போதைப் பொருள் விற்பனை உட்பட சட்டவிரோதமாக வர்த்தகங்களில் சம்பாதிக்கப்படும் பணம் தற்பொழுது சென்ட் மரினோவிலேயே வைப்புச் செய்யப்படுகிறது.

கே.பி. என்ற குமரன் பத்மநாதனுடன் இணைந்து கோத்தபாய ராஜபக்சவே தற்பொழுது ஆயுதம் மற்றும் போதைப் பொருள் வர்த்தகத்தை நடத்தி வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் சிலருடன் இணைந்து போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் அவர், காலி கடலில் இருக்கும் மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை வைத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

கோத்தபாயவினால் இரகசியமான முறையில் வரவழைக்கப்பட்ட ஆயுத கப்பல் ஒன்று ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தினால் பிடிக்கப்பட்டதுடன் பின்னர் இரகசியமான முறையில் விடுவிக்கப்பட்டது.

இவ்வாறான சூழ்நிலையில், இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாடு முடிந்த கையோடு சென்ட் மரினோவுக்கு செல்லவே கோத்தபாய இத்தாலி சென்றுள்ளதாக அந்த சிங்கள இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.