இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் முயற்சிகள் ஆரம்பம்

Written by vinni   // November 20, 2013   //

98af9341faaf59f6956dd6cc4c453a9dஎதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தும் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தும் வகையில் பிரிட்டன் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

பிரிட்டனின் இந்த முயற்சிக்கு அமெரிக்காவும் கனடாவும் ஆதரவளிக்க உள்ளன. சர்வதேச போர் நீதிமன்றம் குறித்த பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை.

எனினும், மனித உரிமைப் பேரவையில் விசேட தீர்மானம் நிறைவேற்றி அதன் மூலம் இலங்கைக்கு எதிராக சர்வதேச போர் நீதிமன்றில் வழக்குத் தொடர முயற்சிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தப்படும் என பிரிட்டன் பிரதமர் கமரூன், புலம்பெயர் தமிழர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது,


Similar posts

Comments are closed.