2014ம் ஆண்டில் 20 அரசு விடுமுறைகளாம்!

Written by vinni   // November 20, 2013   //

cala2014ம் ஆண்டுக்கான தமிழக அரசின் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
2013ம் ஆண்டு பெரும்பாலான அரசு விடுமுறைகள் சனி, ஞாயிறு போன்ற வழக்கமான விடுமுறை நாட்களில் வந்தன.

ஆனால் இந்த முறை பெரும்பாலான விடுமுறைகள் வாரத்திற்கு நடுவில் வருவதால் அரசு ஊழியர்கள், மாணவ, மாணவியருக்கு சற்றே ஆறுதல் ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் விடுமுறை தினப் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதில் ஜனவரி 1ம் திகதி ஆங்கிலப் புத்தாண்டுக்கு அரசு விடுமுறையாகும்.

பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 14ம் திகதி முதல் 16ம் திகதி வரை விடுமுறையாகும்.

இந்த நாட்கள் செவ்வாய், புதன், வியாழன் நாட்களில் வருகிறது, ஜனவரி 26ம் திகதி குடியரசு தினம். இது ஞாயிற்றுக்கிழமை வருகிறது. மார்ச் 31ம் திகதி தெலுங்கு வருடப் பிறப்புக்கு விடுமுறை.

ஏப்ரல் 13ம் திகதி மகாவீரர் ஜெயந்திக்கும், 14ம் திகதி தமிழ்ப் புத்தாண்டுக்கும் விடுமுறையாகும்.

ஏப்ரல் 18ம் திகதி புனித வெள்ளிக்கும், மே தினத்தையொட்டியும் விடுமுறையாகும்.

யூலை 29ம் திகதி ரம்ஜான் பண்டிகைக்கு அரசு விடுமுறையாகும். ஆகஸ்ட் 15ம் திகதி 17 ஆகிய நாட்களும் அரசு விடுமுறையாகும்.

ஆகஸ்ட் 29 விநாயகர் சதுர்த்தி, அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, அக்டோபர் 3 விஜயதசமிக்கு விடுமுறை.

தீபாவளி பண்டிகை அடுத்த ஆண்டு அக்டோபர் 22ம் திகதி வருகிறது. மொத்தத்தில் 2014ம் ஆண்டில் மொத்தம் 20 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.


Similar posts

Comments are closed.