பெங்களூரில் 15 வயது சிறுமி கடத்தி கற்பழிப்பு

Written by vinni   // November 19, 2013   //

rapeingபெங்களூர் அருகே தோடபெலவங்களா என்ற கிராமம் உள்ளது.

நேற்று முன்தினம் இந்த கிராமத்தில் நடந்த ஒரு விழாவுக்காக இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பக்கத்து கிராமங்களை சேர்ந்தவர்களும் ஏராளமானோர் வந்து இருந்தனர்.

10–வது வகுப்பு படிக்கும் ஒரு 15 வயது சிறுமியும் இசை நிகழ்ச்சியை பார்க்க சென்று இருந்தார். நிகழ்ச்சி முடியும் நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. உடனே, அந்த சிறுமி கிராமத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பினார்.

அப்போது பின் தொடர்ந்து வந்த 4 வாலிபர்கள், சிறுமியை வாயைப் பொத்தி தூக்கி சென்றனர். மறைவான ஒரு இடத்திற்கு சென்றதும் சிறுமியை மிரட்டி குளிர்பானத்தை குடிக்க வைத்தனர்.

பின்னர் 4 பேரும் மாறிமாறி கற்பழித்தனர். மயக்கம் அடைந்த சிறுமியை அதே இடத்தில் போட்டு விட்டு தப்பி விட்டனர். நேற்று காலை சிறுமி தனியாக கிடந்ததை கிராமத்தினர் சிலர் கண்டு, அவளது வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சிறுமி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

போலீஸ் விசாரணையின்போது சிறுமி, இசை நிகழ்ச்சிக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது 4 பேர் சேர்த்து என்னை ஒரு இடத்துக்கு கடத்திச் சென்றனர். என்னை மிரட்டி குளிர்பானம் குடிக்க வைத்தனர். எனக்கு மயக்கம் வந்தது. பின்னர் என்ன நடந்தது என்று தெரிய வில்லை என தெரிவித்தார்.

கடத்தியவர்களில் தனது கிராமத்தை சேர்ந்த 2 பேரின் பெயரையும் கூறினார். அவர்கள் உள்பட 4 பேரையும் போலீசார் தேடிவருகிறார்கள்.


Similar posts

Comments are closed.