ஆபாச வெப்சைட்டுகளை முடக்குவது எப்படி?

Written by vinni   // November 19, 2013   //

blocked websitesஆபாச வெப்சைட்களை முடக்கும் வழிமுறைகள் பற்றி 3 வாரத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தொலை தொடர்புத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆபாச வெப்சைட்களை முடக்க கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கமலஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இணையதளத்தை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் 20 கோடி ஆபாச காணொளிகள் இலவசமாக கிடைக்கின்றன.

ஆபாச படங்களை சிறுவர்களும் பார்க்கும் நிலை இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெடும் அபாயம் உள்ளது. ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் தூண்டுதலால்தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கின்றன.

சிறுமிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் கொடுமை மிகவும் கவலையளிக்கிறது.டெல்லியில் மருத்துவ மாணவி ஒருவர் 6 பேர் கும்பலால் கொடூரமாக பலாத்கார கொலை செய்யப்பட்டார்.

இது போன்ற குற்றங்களை தூண்டுவது ஆபாச படங்கள்தான். ஆபாச பட பிரச்னையை ஒழிக்க இந்திய தண்டனை சட்டத்தில் உள்ள சட்ட பிரிவுகள் போதுமானதாக இல்லை என்றும் ஆபாச படம் பார்ப்பது அதை மற்றவருக்கு அனுப்புவது போன்றவற்றை ஜாமீனில் வெளிவரமுடியாத குற்றமாக மாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இந்த மனுவினை விசாரித்த நீதிபதி பி.எஸ்.சவுகான், இந்த குற்றமானது தொலை தொடர்பு துறை, ஒளிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வருவதால், ஆபாச வெப்சைட்களை முடக்கும் வழிமுறைகள், குறிப்பாக குழந்தைகள் தொடர்பாக ஆபாச வெப்சைட்களை முடக்கும் வழிமுறைகளை பற்றி இந்த துறைகள் 3 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


Similar posts

Comments are closed.