9 வயது சிறுமியை கற்பழித்து பீரோவில் அடைத்த வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு

Written by vinni   // November 19, 2013   //

rapeஐதராபாத் அருகே உள்ள தாவூத் பஸ்தி பகுதியைச் சேர்ந்தவர் பப்லு (25). திருமணமான இவர் பீகாரைச் சேர்ந்தவர். இவரது மனைவி பிரசவத்துக்காக சொந்த ஊர் சென்று விட்டார். தனிமையாக இருந்த இவரது காம பார்வை பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 வயது சிறுமி மீது விழுந்தது.

மாலையில் வீட்டு முன் விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை அழைத்து சாக்லெட் தருவதாக கூறி வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

பின்னர் சிறுமியை பலவந்தமாக கற்பழித்தார். இதில் அந்த சிறுமி மயக்கம் அடைந்தாள். இது வெளியே தெரிந்தால் ஆபத்து என்று கருதிய அவர் சிறுமியின் கை–கால்களை கட்டி பீரோவில் அடைத்து மூடி விட்டார்.

விளையாடிக் கொண்டு இருந்த சிறுமியை காணவில்லை என்று அவரது பெற்றோர் தேடினார்கள். அவர்களுடன் பப்லுவும் சிறுமியை தேடுவது போல் நாடகமாடினார்.

அப்போது ஒரு பெண், சிறுமியை பப்லு அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்றதாக கூறினாள். குட்டு அம்பலமானதால் பப்லு தலைமறைவானார்.

சிறுமியின் பெற்றோர்கள் பப்லு வீட்டு கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அப்போது பீரோவுக்குள் இருந்து சிறுமியின் முனகல் சத்தம் கேட்டது.

பொதுமக்கள் பீரோவை உடைத்து சிறுமியை மீட்டனர். கை–கால்களை கட்டி இருந்து கயிற்றை அவிழ்த்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது குறித்து ஜீடிமெட்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து பப்லுவை தேடி வருகிறார்கள்.


Similar posts

Comments are closed.