நியூசிலாந்திற்கு எதிரான மேற்கிந்தியத் தீவுகளின் அணி அறிவிப்பு

Written by vinni   // November 19, 2013   //

westநியூசிலாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகளின் அணி விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரான இத்தொடர் எதிர்வரும் டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளிலும் இன்னிங்ஸ் தோல்வியடைந்து அதிக விமர்சனங்களைச் சந்தித்தபோதிலும், அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட அணியையே மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இதன்படி, அத்தொடரில் துடுப்பாட்டத்திலும் பந்துவீச்சிலும் மோசமான பெறுபேறுகளை வெளிப்படுத்திய அவ்வணியின் தலைவர் டெரன் சமி தொடர்ந்தும் தலைவராகச் செயற்படவுள்ளார்.

முழு அணி விபரம்

டெரன் சமி, ரீனோ பெஸ்ற், டெரன் பிராவோ, ஷிவ்நரின் சந்தர்போல், ஷென்டன் கொட்டரெல், நர்சிங் டியோநரைன், கேர்க் எட்வேர்ட்ஸ், கிறிஸ் கெயில், வீரசமி பேர்மாள், கெரான் பவல், டினேஷ் ராம்டின், கேமர் றோச், மார்லன் சாமுவேல்ஸ், ஷேன் ஷிலிங்ஃபோர்ட், சட்விக் வோல்ற்றன்


Similar posts

Comments are closed.