18 வருடங்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்த அண்ணன்- தங்கை

Written by vinni   // November 19, 2013   //

new_familyபிரான்சில் அனாதை விடுதியில் வளர்ந்த அண்ணனும், தங்கையும் 18 வருடங்களுக்கு பிறகு குடும்பத்தினருடன் சேர்ந்துள்ளதால் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர்.
கடந்த 1961ம் ஆண்டு இத்தாலியை சேர்ந்த நபர் கரிப்பா, வேலை தேடி தன் குடும்பத்தினருடன் பிரான்சுக்கு வந்துள்ளார்.

இவரது மனைவி மனநலம் குன்றியவர், லூயிஸ், வெரேனிக்கா என இரண்டு குழந்தைகள் இருந்துள்ளனர்.

பல ஆண்டுகள் தேடி வேலை கிடைக்காத காரணத்தால், குடும்பத்தினரை விட்டு விட்டு இத்தாலிக்கு திரும்பியுள்ளார்.

லூயிஸ் மற்றும் வெரேனிக்கா இருவரும் பிரான்சில் அனாதை விடுதியில் வளர்ந்துள்ளனர்.

தாய்நாட்டுக்கு சென்ற கரிப்பா, மரியஞ்சேலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டதுடன் 10 குழந்தைகளுக்கு தகப்பனார் ஆனார்.

இந்நிலையில் லூயிசும் அவருடைய சகோதரியும் இணைந்து, இத்தாலியில் குடும்பத்தினரை தேடி அலைந்துள்ளனர்.

சுமார் 18 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய குடும்பத்தினரை சந்தித்துள்ளதால் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர், இவரது தந்தை கடந்தாண்டு உயிரிழந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.