இந்தோனேசிய ஜனாதிபதியை உளவு பார்த்த அவுஸ்திரேலியா உளவு அமைப்பு

Written by vinni   // November 19, 2013   //

Quake-in-Indonesia-triggers-tsunami-warnings-2012_quakeஇந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பங் யுதோயோனோ, அவரது மனைவி அனி மற்றும் மூத்த அமைச்சர்களின் தொலைபேசி உரையாடல்களை அவுஸ்திரேலிய உளவு அமைப்பு ஒட்டுக்கேட்க முயன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அவுஸ்திரேலியாவை இந்தோனேசிய ஜனனாதிபதி மாளிகை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தோனேசிய ஜனாதிபதி மற்றும் அவருக்கு நெருக்கமான 9 பேரை உளவு பார்த்ததாக அவுஸ்திரேலிய ஒளிபரப்புக் கழகமும், “தி கார்டியன்’ நாளிதழும் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய உளவு அமைப்பின் முன்னாள் ஊழியர் எட்வர்டு ஸ்னோடெனிடமிருந்து பெற்ற ரகசிய ஆவணங்களின் அடிப்படையில் இச்செய்தியை அவை வெளியிட்டன.

அவுஸ்திரேலியப் பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த கெவின் ரூத் பதவி வகித்தபோது, மின்னணு புலனாய்வு அமைப்பும், பாதுகாப்பு இயக்குநரகமும் இணைந்து, 2009-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 15 நாட்களாக இந்தோனேசிய ஜனாதிபதி சுசிலோ பாம்பங்கின் தொலைபேசி ஒட்டுக்கேட்டுள்ளன.


Similar posts

Comments are closed.