மிதக்கும் விமான நிலையம்

Written by vinni   // November 19, 2013   //

floating_airport_003லண்டன் தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே பிஸியான விமான நிலையங்களில் ஒன்று தான் ஹீத்ரு விமான நிலையம்.

பிரிட்டனை பொருத்தவரையில் கடந்த 2002ம் ஆண்டில் 7.23 கோடி பேர் விமானத்தில் பயணம் செய்துள்ளனர்.

ஆனால் கடந்தாண்டில் மட்டும் 11.5 கோடி பேர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனர், இது 60 சதவிகிதத்துக்கும் அதிகமாகும்.

இந்த எண்ணிக்கை அடுத்த 15 ஆண்டுகளில் மிகவும் அதிகரிக்கும் என போக்குவரத்துத் துறை கணக்கிட்டுள்ளது.

இதற்கு ஏற்றாற் போல் விமான நிலையங்களை விரிவுபடுத்துவது குறித்து இங்கிலாந்து போக்குவரத்துத் துறை ஆலோசித்து வருகிறது.

ஹீத்ரு விமான நிலையத்தில் 3வது ஓடுதளத்தை ஏற்படுத்துவதற்கே ஏராளமான கிராமங்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாற்று ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புகழ்பெற்ற தேம்ஸ் நதியில் மிதக்கும் விமான நிலையத்தை அமைப்பது குறித்து தேம்ஸ் நதி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் போக்குவரத்துத் துறைக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதற்காக மாதிரி விமான நிலையத்தை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது.

எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு படிப்படியாக விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளை அந்த நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

பிரிட்டானியா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தை உருவாக்க ரூ.4.7 லட்சம் கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.


Similar posts

Comments are closed.