நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய போர்ட்டேபிள் ஸ்பீக்கர் அறிமுகம்

Written by vinni   // November 18, 2013   //

wireless_speaker_002Favi நிறுவனமானது புளூடூத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டதும் இலகுவாக எடுத்துச்செல்லக்கூடியதுமான ஸ்பீக்கர்களினை அறிமுகம் செய்துள்ளது.

Boomerang, Boomerang Mini என்ற இரண்டு வகை பதிப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

வெள்ளை, கறுப்பு, மஞ்சள் எனும் மூவகை நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள Boomerang ஸ்பீக்கர் ஆனது 7.83 x 8.2 x 2 அங்குல அளவு கொண்டதாகவும், 6 W சக்தியினை வெளிவிடக்கூடியதாகவும் இருக்கின்றது.

இதன் பெறுமதியானது 79.99 டொலர்களாகும்.

இதேவேளை Boomerang Mini 4 W சக்தியினை வெளிவிடக்கூடியதாகவும், 5.91 x 6.12 x 1.49 அங்குல அளவுடையதாகவும் காணப்படும் அதேவேளை இதன் விலையானது 59.99 டொலர்களாக காணப்படுகின்றது.


Similar posts

Comments are closed.