சர்வதேச விசாரணைகளை தவிர்க்க இலங்கைக்கு சந்தர்ப்பம் உள்ளது

Written by vinni   // November 18, 2013   //

william_hague_001போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை தவிர்ப்பதற்கு இலங்கைக்கு இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் தொடர்பில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் உள்நாட்டில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த வேண்டும்.

இலங்கை தமது நாட்டுக்குள் அப்படியான சுயாதீன விசாரணைகளை நடத்தினால் இலங்கை தொடர்பில் வெளிநாடுகள் கொண்டுள்ள நிலைப்பாடுகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படும் என்றார்.

போர்க்குற்றங்கள் தொடர்பில் மார்ச் மாதத்திற்குள் உள்நாட்டில் சுயாதீனமான விசாரணைகளை நடத்த தவறினால் சர்வதேச விசாரணை ஒன்றை நடத்துவதற்கான யோசனையை முன்வைக்க போவதாக பிரித்தானிய பிரதமர் தெரிவித்திருந்த கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக வில்லியம் ஹேக் இதனை குறிப்பிட்டுள்ளார்.


Similar posts

Comments are closed.