இத்தாலியில் வெடித்து சிதறும் எட்னா எரிமலை (வீடியோ இணைப்பு)

Written by vinni   // November 18, 2013   //

etna_volcano_002

இத்தாலியில் உள்ள எட்னா எரிமலை ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் உயரமானது.
தெற்கு இத்தாலியின் சிசிலி தீவிலுள்ள இந்த எரிமலை கடந்த அக்டோபர் மாதம் 27-ம் திகதி வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து கரும் புகையுடன் எரிமலை குழம்பு பீறிட்டு பாய்ந்தது.

சிசிலியில் கடானியா விமான நிலையம் அருகே இந்த எரிமலை உள்ளதால் எரிமலையில் இருந்து வெளியேறிய புகை விண்ணிலும், விமான நிலையத்திலும் பரவியது. இதனால் கடானியா விமான நிலையம் மூடப்பட்டது. அங்கு விமான போக்குவரத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

கடந்த ஒரு மாதகாலமாக சற்று சாந்தமாக இருந்த எட்னா எரிமலை நேற்று மீண்டும் வெடித்தது. எரிமலையில் இருந்து வெளியேறிய தீப்பிழம்பு நீலவானத்தை செந்நிறமாக மாற்றியது. தீயில் இருந்து பறந்த சாம்பல் சிசிலி தீவு முழுவதும் படர்ந்துள்ளது.

இம்முறை எரிமலையின் அடிவாரத்தில் வசிக்கும் மக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 1992–ம் ஆண்டு வெடித்து சிதறிய எட்னா எரிமலை, அதன் பின்னர் 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இந்த ஆண்டில் இருமுறை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Similar posts

Comments are closed.