பாலியல் கொடூரங்களால் குழந்தைகளுக்கு நேரும் கொடுமைகள்!

Written by vinni   // November 18, 2013   //

child_marrage_002உலகளவில் இந்தியாவில்தான் அதிகளவில் குழந்தை திருமணம் நடப்பதாக ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் குழந்தை திருமணம் தடுப்பு சட்டம் நடைமுறை யில் இருந்தாலும் மாநிலம் முழுவதும் ஏதாவது ஒரு மூலையில் குழந்தை திருமணம் நடந்து கொண்டு தான் இருக்கிறது.

பெரும்பாலும் கிராமபுறங்களில் தான் இது அதிகளவில் அரங்கேறி வருகிறது.கிராமங்களில் வாழும் பெண்கள் குடும்ப வறுமை, ஆணாதிக்கம், அடிமைத்தனம், ஆகிய காரணங்களினால் கட்டாய குழந்தை திருமணத்திற்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

ஒரு சில ஊர்களில் சமுதாய ரீதியாகவும், பெண்களுக்கு குழந்தை திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. பெரும்பாலான கிராமங்களில் பெண்கள் பருவத் துக்கு வந்ததும், திருமணம் செய்து வைக்க பெற்றோர் அவசரப்படுகின்றனர்.

மாறி வரும் சமூகத்தில் நடக்கும் பாலியல் கொடூரங்களை கண்டு பயந்துதான் குழந்தைகளின் பெற்றோர் இதுபோன்ற அவசர முடிவு எடுக்கின்றனர்.

அதற்காக 15 வயதுக்குள் பெண் குழந்தைகளுக்கு திருமணம் நடத்தி வைப்பதால், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். குழந்தை திருமணத்தால் பெண்கள் வறுமை, பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் திருமணம் செய்து கொள்வதால் சிறுவயதிலே கருவுறுதல், கருச்சிதைவு ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

மேலும் 15 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் கர்ப்பம் தரித்தல், பிரசவத்தின் போது ஏற்படும் பிரச்னைகளால் பெண்களின் இறப்பு விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் அதிகப்படியாக 45 சதவீதம் குழந்தை திருமணம் நடப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வடமாநிலங்களில் 40 சதவீதமும் தமிழகத்தில், 45 சதவீதமும் குழந்தை திருமணம் நடக்கிறது என்று தெரிவித்துள்ளது.

 


Similar posts

Comments are closed.