சச்சின் ஓய்வு: மனமுடைந்த ரசிகர் தற்கொலை

Written by vinni   // November 18, 2013   //

sachinடெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதால் மன வேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குஜராத் மாநிலம் பூஜ் மாவட்டத்தில் உள்ள வார்லி கிராமத்தை சேர்ந்த இளைஞர் விஜய் கோவிந்த் (20). இவர் சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகர்.

சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த நாளில் இருந்தே மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளார் . கடந்த ஒரு வாரமாக தனது நண்பர்களிடம், சச்சின் ஓய்வு பெறும் நாள்தான் தன் வாழ்வின் இறுதிநாள் என்று கூறி புலம்பி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று சச்சின் ஓய்வு பெற்றதை தாங்க முடியாத விஜய் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Similar posts

Comments are closed.