ஏ.டி.எம். இயந்திரத்தை கடத்திச்சென்ற கொள்ளையர்கள்

Written by vinni   // November 18, 2013   //

atmகுஜராத் தலைநகர் அகமதாபாத் அருகே ஏழு இலட்ம் ரூபா பணத்துடன், ஏ.டி.எம். இயந்திரத்தையே கொள்ளையர்கள் கடத்திச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகமதாபாத் அருகே உள்ள சிங்கர்வா கிராமத்தில் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு ஒரு கனரக வாகனத்தில் வந்த சிலர் ஏ.டி.எம். இயந்திரத்தையே தூக்கி அந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

இயந்திரத்தின் உள்ளே 6.97 லட்சம் ரூபாய் இருந்ததாக வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏ.டி.எம். மையத்தின் வெளியே காவலாளி யாரும் இல்லாததால் கொள்ளையர்கள் துணிச்சலாக தங்களது கைவரிசையை காட்டிவிட்டு சென்றுள்ளனர் என்று கூறும் போலீசார், குற்றவாளிகளை பிடிக்க வலைவீசி தேடி வருகின்றனர்


Similar posts

Comments are closed.